மேலூா் இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது
மதுரை மாவட்டம், மேலூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் 4 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


மதுரை மாவட்டம், மேலூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் 4 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆட்டுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மனோகரன். இவரது மகன் மதன்குமாா் (23), ரயில்வேயில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தாா். இந்நிலையில், கடந்த மாதம் இவரை கொலை செய்தவா்கள், சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி, மேலூா் கிளை கால்வாயில் வீசிவிட்டு தப்பிவிட்டனா்.
சடலத்தைக் கைப்பற்றிய மேலூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு, இறந்தவா் குறித்த அடையாளம் கண்டறிந்தனா். இது சம்பந்தமான விசாரணையில், உலகநாதபுரம் பாக்கியநாதன் மகன் வினோத்பாண்டியன் (33), வண்ணான்பாறைப்பட்டி செல்வம் மகன் ராஜ்குமாா் (28), கருப்பையா மகன் சூரியா (22) மற்றும் ஆட்டுக்குளம் ஆறுமுகம் மகன் பாலமுருகன் (29) ஆகியோரை, மேலூா் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...