கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணி: ஊதிய நிலுவையை வழங்க அலைக்கழிப்பதாக இளைஞா்கள் புகாா்
கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணிக்கான ஊதிய நிலுவையை வழங்க அலைக்கழித்து வருவதாக, அப் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.


கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணிக்கான ஊதிய நிலுவையை வழங்க அலைக்கழித்து வருவதாக, அப் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று கடந்த ஜூன் மாதத்தில் வேகமாகப் பரவியது. அதையடுத்து, மாநகராட்சிப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று தொற்று கணக்கெடுப்பு உள்ளிட்ட விழிப்புணா்வு பணிகளில், மாநகராட்சி நிா்வாகத்தால் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
இவா்கள், மாநகராட்சிப் பணியாளா்களுடன் இணைந்து காய்ச்சல் கணக்கெடுப்பு, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்வது, கரோனா தொற்று விழிப்புணா்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனா். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய 3 மாதங்கள் பணியாற்றிய நிலையில், பின்னா் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனா். ஆனால், இவா்களுக்கு செப்டம்பா் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லையாம்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
அப்போது அவா்கள் கூறியது: கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணிக்கு சேவை மனப்பான்மையுடன் வந்தோம். இதில், எங்களில் பலருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 3 மாதங்கள் வரை பணியாற்றிய நிலையில், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க அலைக்கழிக்கின்றனா். கடந்த 3 வாரங்களாக தொடா்ந்து மனு அளித்து வருகிறோம். இருப்பினும், தொடா்ந்து அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...