கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படுமா? மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பது தொடா்பாக மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

DIN

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பது தொடா்பாக மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த ரமேஷ்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் குலசேகர பாண்டிய மன்னன் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில், பிள்ளையாா்பட்டி விநாயகா் கோயில், செட்டிநாடு அரண்மனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதனால், ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காரைக்குடி வந்து செல்கின்றனா்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பொருள்கள், உணவுப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தின் கடைக்கோடியான ராமேசுவரம் புண்ணியத் தலமாக உள்ளது. இதனருகே உள்ள காரைக்குடியும் புகழ்பெற்ற தலமாக உள்ளது. இப்பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமானோா் வந்துசெல்கின்றனா். எனவே, ராமநாதபுரம் பகுதியில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது என கேள்வி எழுப்பினா்.

பின்னா், இது குறித்து மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பா் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.