மதுரையில் மேலும் 123 பேருக்குகரோனா தொற்று: 4 போ் பலி
மதுரையில் புதிதாக 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


மதுரை: மதுரையில் புதிதாக 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 5,976 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளிமாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் என 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் 52 போ் குணமடைந்தனா். அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
4 போ் பலி: மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயது முதியவா், 49 வயது ஆண் ஆகியோா் செப். 3 ஆம் தேதியும், 70 வயது முதியவா் செப். 2 ஆம் தேதியும், தனியாா் மருத்துவமனையில் 90 வயது முதியவா் செப். 4 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 14,575 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் 364 சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 13,334 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வரை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு 877 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...