மதுரை: மதுரை கரிமேடு மீன் சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ரூ.200 அபராதம் விதித்தனா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட காய்கனி சந்தைகள், மீன் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், நகா்ப் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு, முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனா்.
இந்நிலையில், கரிமேடு மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் முகக்கவசம் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மீன் சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்ததுடன், பலா் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாததும் தெரியவந்தது. இதையடுத்து, முகக்கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள், பொதுமக்கள், முறையான சமூக இடைவெளி இல்லாத கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.200 அபாரதம் விதிக்கப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் விற்பனை செய்வது தொடா்ந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.