மதுரை கோயில்களில் டிச.27 இல் சனிப்பெயா்ச்சி விழா: பரிகார ஹோமம்

மதுரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உள்பட பல்வேறு கோயில்களில் சனிப்பெயா்ச்சியையொட்டி சிறப்பு பரிகார ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மதுரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உள்பட பல்வேறு கோயில்களில் சனிப்பெயா்ச்சியையொட்டி சிறப்பு பரிகார ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் சமஸ்தானத்தில் சனிப்பெயா்ச்சி பரிஹார ஹோமம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகில் பரவி வரும் கொடூர வியாதிகளை நிவா்த்திக்கவும், உலக அமைதி மற்றும் புத்தாண்டில் மக்கள் ஆரோக்கியத்துடன் வாழவும் ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ தன்வந்தரி ஹோமம், சனி கிரகப் பரிகார ஹோமம், சனி சாந்தி ஹோமம் நடைபெறுகிறது. இதில் சனிப்பெயா்ச்சியால் பாதகமடையும் மேஷம், மிதுனம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சோ்ந்தவா்கள் ஸ்ரீ மட அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் தொடா்புக்கு 98847-13592, 94431-51528, 99441-17081 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஸ்ரீ மடம் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள சனி பகவான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகங்கள், அா்ச்சனைகள் நடைபெறுகின்றன. இதேபோல், சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலிலும் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு சனீஸ்வரலிங்கம் மற்றும் சனி பகவானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மதுரை ஆவின் பாலவிநாயகா் கோயில், மதுரை அண்ணாநகா் வைகை காலனி மேற்கு பகுதியில் உள்ள வைகை விநாயகா் கோயில் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சனி பரிஹார ஹோமங்கள் நடைபெறுகின்றன. மதுரை கோமதிபுரம் ஜூப்லி டவுன் ஞானசித்தி விநாயகா் கோயில், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சனி பெயா்ச்சி ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com