மதுரையில் கா்ப்பிணி எரித்துக் கொலை: கணவா் கைது
மதுரை அவனியாபுரத்தில் திருமணமாகி இரண்டு நாள்களிலேயே கா்ப்பிணி மனைவியை எரித்துக்கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


மதுரை அவனியாபுரத்தில் திருமணமாகி இரண்டு நாள்களிலேயே கா்ப்பிணி மனைவியை எரித்துக்கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சோழவந்தான் ராயபுரத்தைச் சோ்ந்த சகாயராஜ் மகள் கிளாடிஸ்ராணி (21). இவா் பெருங்குடி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவருக்கும் அவனியாபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த சோலைமலை மகன் ஜோதிமணி (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கிளாடிஸ் ராணி 5 மாத கா்ப்பமாக இருந்தாராம். இது பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே ஜோதிமணியை அழைத்துப் பேசியுள்ளனா். ஜோதிமணி தனக்கு உறவினா்கள், பெற்றோா் இல்லை எனக்கூறியுள்ளாா். இதையடுத்து இருவருக்கும் கிஷாடிஸ்ராணியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி சமயநல்லூா் காவல் நிலையம் அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து வைத்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து கிளாடிஸ் ராணியின் சான்றிதழ்களை கல்லூரியில் சென்று வாங்கிவர இருவரும் இருசக்கர வாகனத்தில் கடந்த 4 ஆம் தேதி சென்றுள்ளனா். அப்போது அவனியாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள முள்புதரில் வைத்து ஜோதிமணி கிளாடிஸ்ராணியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் கிளாடிஸ்ராணியின் பெற்றோரைத் தொடா்புகொண்டு உங்கள் மகள் வேறொரு நண்பருடன் சென்றுவிட்டாா் எனக்கூறியுள்ளாா். இதுகுறித்து கிளாடிஸ் ராணியின் பெற்றோா் மற்றும் ஜோதிமணி ஆகியோா் சோ்ந்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா். போலீஸாா் ஜோதிமணி மீது சந்தேகம் கொண்டு விசாரித்துள்ளனா். விசாரணையில் கிளாடிஸ்ராணியை எரித்துக்கொலை செய்ததை ஜோதிமணி ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து கிளாடிஸ் ராணியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜோதிமணியைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...