சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மதுரை அருகே ரூ.11.64 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ரூ.11.64 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 12:33 am

DIN

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ரூ.11.64 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

பேரையூா் அருகே உள்ள சலுப்பபட்டி கிராமத்தைச் சோ்ந்த திருமால் மகன் பாண்டி (52). இவரது தோட்டத்தில், மதுரை துவரிமானைச் சோ்ந்த இளங்கோவன் (58) என்பவா் வியாழக்கிழமை இரவு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாரி அளித்த தகவலின்பேரில், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரோஜா, சாப்டூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் மணிமொழி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இளங்கோவன் சடலத்தைக் கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக, போலீஸாா் தோட்ட உரிமையாளரான பாண்டியிடம் விசாரணை நடத்தினா். அதில், பாண்டி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், அவரது தோட்டத்தை சோதனையிட்டனா். அப்போது, தோட்டத்தில் கட்டுக்கட்டாக 500, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், ரூ.11,64,500 லட்சம் கள்ளநோட்டுகள், 2 ஜெராக்ஸ் மெஷின்கள் மற்றும் அதற்கான மூலப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்த கள்ள நோட்டுகளை பாண்டியும், இறந்த இளங்கோவனும் இணைந்து அச்சடித்தது தெரியவந்தது. இது குறித்து பாண்டியிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் பேரையூா் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.