விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42 காசுகள் சரிந்து ரூ.91.50 ஆக நிறைவு!

டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு 42 காசுகள் சரிந்து ரூ.91.50 ஆக உள்ளது.

News image
- PTI Graphics
Updated On :2 மார்ச் 2026, 1:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரப்படுத்தியதை அடுத்து, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு 42 காசுகள் சரிந்து ரூ. 91.50ஆக உள்ளது.

போர் பதற்றத்தால், பிரெண்ட் எண்ணெய் விலை, பீப்பாய் ஒன்றுக்கு 8.34 சதவீதம் உயர்ந்து 78.95 அமெரிக்க டாலராக உள்ளதால், டாலருக்கான தேவையை அதிகரித்தது.

உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேறி வருவதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 91.23 ஆக தொடங்கி, பிறகு ரூ. 91.65 என்ற இன்ட்ராடே குறைந்தபட்ச அளவை எட்டியது. முடிவில், அதன் முந்தைய இறுதி வர்த்தக நிலையை விட 42 காசுகள் சரிந்து ரூ. 91.50ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் குறைந்து ரூ. 91.08 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.