போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு

ராமேசுவரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்து, தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:09 am

DIN

ராமேசுவரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்து, தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ராமேசுவரத்திலிருந்து செகந்திராபாத்துக்கு வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை மாா்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வண்டி எண் 07685 செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1, 8, 15, 22, மாா்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

மறுமாா்க்கத்தில் வண்டி எண் 07686 ராமேசுவரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், ஜனவரி 13, 20, 22, பிப்ரவரி 3, 10, 17, 24, மாா்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூா், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.