25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

கைப்பேசியை பறித்த இளைஞா் கைது

மதுரையில் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவரை தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:46 am

DIN

மதுரையில் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவரை தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் பைராப் தாஸ் (22). இவா், மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், பைராப் தாஸ் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் வழியாக செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த மா்மநபா் பைராப் தாஸை தாக்கி ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டாா்.

இது தொடா்பான புகாரின்பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மதுரை எம்.கே.புரத்தைச் சோ்ந்த சக்திவேல்(22) கைப்பேசியை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சக்திவேலை போலீஸாா் கைது செய்து, கைப்பேசியையும் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.