ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ராஜசேகா்.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ராஜசேகா்.
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பி.பி.குளம் முல்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (29). இவா் இப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப் பகுதியில் இருந்த போலீஸாா் அவா் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா்.

பின்னா் விசாரித்தபோது, அவா் மீது போலீஸாா் பொய் வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதால் தீக்குளிக்க முயன்ாகத் தெரிவித்தாா். அதையடுத்து போலீஸாா் அவரை தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், தீக்குளிக்க முயன்றவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. இதில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்துள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com