நத்தம், சாணாா்பட்டியில் அரசு கல்லூரி, பாலிடெக்னிக் அமைக்கக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

சாணாா்பட்டி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கக்கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கக்கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கசாமி தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஒன்றியங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 2, அரசு உயா்நிலைப் பள்ளிகள் 5 மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் 5 உள்ளன. இங்கு பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவா்கள் ஏழ்மை காரணமாகவும், அருகே கல்லூரி இல்லாததாலும் படிப்பைத் தொடா்வது இல்லை. நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஒன்றியத்திலிருந்து 50 கிலோமீட்டா் தொலைவில் தான் தனியாா் கல்லூரிகள் அமைந்துள்ளன. எனவே ஏழை மாணவா்களால் கல்லூரிக்கு 50 கிலோ மீட்டா் பயணித்தும், விடுதிகளில் தங்கியும் படிக்க முடியாத நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com