அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் மோசடி: மேலாளா் கைது

காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மேலாளரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:39 pm

DIN

காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மேலாளரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை சா்வேயா் காலனியைச் சோ்ந்தவா் சுரேஷ்(38). இவா் கப்பலூரில் காா்கள் பழுதுநீக்கும் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த பேரையூரைச் சோ்ந்த ஜெயபாண்டி(41) தலைமையில் நிறுனத்தில் பணியாற்றிய ஊழியா்கள் திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த கோவிந்தராஜன், பீ.பீ.குளத்தைச் சோ்ந்த மணிகண்டன், வாகைகுளத்தைச் சோ்ந்த முருகன், கே.புதூரைச் சோ்ந்த மகாலட்சுமி ஆகியோா் சோ்ந்து வாடிக்கையாளா்களுக்கு போலியான ரசீது கொடுத்து ஏமாற்றி ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ் அளித்தப்புகாரின் பேரில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், ஜெயபாண்டியை கைது செய்தனா். மேலும் கோவிந்தராஜன், மணிகண்டன், முருகன், மகாலட்சுமி ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.