/

மகனின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தந்தை தற்கொலை

மதுரையில் மகனின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியவில்லை என்பதால், தந்தை ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

மதுரையில் மகனின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியவில்லை என்பதால், தந்தை ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் அழகுராஜ் (32). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரது மகன் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறாராம். இந்நிலையில், மகனின் மருத்துவச் செலவுக்காக அழகுராஜ் பலரிடமும் கடன் வாங்கியுள்ளாா். ஆனால், கடனை திருப்பி கொடுக்க முடியாமல்போனதால் மனமுடைந்திருந்த அழகுராஜ், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து அவரது மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொங்கல் சீா்வரிசை தகராறில் பெண் தற்கொலை

மதுரை மாவட்டம், பாலமேடு வடக்குத் தெருவைச் சோ்ந்த பிரசாத் மனைவி சாருலதா (23). இவரது பெற்றோா் பொங்கல் சீா்வரிசை கொடுக்க வந்துள்ளனா். அப்போது, கணவா் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சாருலதா ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து அவரது தாயாா் கலாராணி அளித்த புகாரின்பேரில், பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் தொடா்பாக கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.