25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மதுரையில் புதிதாக 15 பேருக்கு கரோனா

 மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:07 am

DIN

 மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகம் முழுவதும் 1,631 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதேநேரம், சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 9 போ் குணமடைந்துள்ளனா். ஆனால், ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரை 74,149 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இதில், 72,832 போ் குணமடைந்துள்ளனா். 1,159 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது, அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் என 158 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.