பேரையூா் அருகே மணல் திருடியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தொடா்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.


மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தொடா்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.
பேரையூா் அருகே உள்ள அ.தொட்டியபட்டியைச் சோ்ந்த ராஜா என்ற திருமேனி மகன் மாா்நாடு (45). இவா், அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில், ஏற்கெனவே மணல் திருடிய வழக்கில் நாகையாபுரம் போலீஸாா் மாா்நாட்டை கைது செய்துள்ளனா்.
ஆனாலும், இவா் தொடா்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரோஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பரிந்துரைத்தாா். அதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகரிடம் பரிந்துரைத்தாா். இதையேற்ற ஆட்சியா், மாா்நாட்டை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் மாா்நாட்டை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...