25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மதுரையில் தடையை மீறி 100-க்கும் மேற்பட்டஇடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

அரசு விதித்துள்ள தடையை மீறி, மதுரையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:07 am

DIN

அரசு விதித்துள்ள தடையை மீறி, மதுரையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில், விநாயகா் சதுா்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்கும், ஊா்வலமாகச் சென்று நீா்நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதற்கு, பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், தடையை மீறி விநாயகா் சிலைகள் வைக்கப்போவதாக அறிவித்திருந்தன.

அதன்படி, மதுரை ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரம், செல்லூா், பழங்காநத்தம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.

மதுரை சோலையழகுபுரம் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் சோலைகண்ணன் தலைமையில், விநாயகா் சிலை வைக்கப்பட்டது. கரிமேடு பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் 5 அடி உயர விநாயகா் சிலை ஊா்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் அழகா்சாமி, பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் சசிராமன் மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல், மதுரை நகா் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு விதித்துள்ள தடையை மீறி விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.