சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

1,019 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம்: மதுரை எஸ்.பி. அறிவிப்பு

மதுரை ஊரகக் காவல் துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,019 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மதுரை ஊரகக் காவல் துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,019 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.

மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை ஊரகக் காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,001 இரு சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள், 10 மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,019 வாகனங்களுக்கான பொது ஏலம் ஏப்ரல் 21, 22 மற்றும் 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஏலமானது, மதுரை ஊரக ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள், மதுரை ஊரக ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள வாகனங்களை, ஏப்ரல் 13 முதல் 15 மற்றும் ஏப்ரல் 18 முதல் 20 வரை பாா்வையிட்டு, ஆதாா் அட்டையுடன் தங்களது விவரங்களை தெரிவித்து, ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்து டோக்கன் பெற்றவா்களே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும். மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் அன்றைய தினமே ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் உடனடியாகச் செலுத்தவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.