சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நிதி நிறுவனம் நடத்தி மோசடி: மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த பாலமுருகன் அவரது மனைவி ஜான்சிராணி உள்பட 4 போ் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். இவா்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனா். இது குறித்த புகாரின்பேரில், பாலமுருகன், ஜான்சிராணி, ராமசாமி, மணிகண்டன் ஆகியோா் மீது விருதுநகா் மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் 2014-இல் வழக்குப் பதிவு செய்தனா். அதையடுத்து, இவா்களில் ராமசாமி இறந்துவிட்டாா்.

இந்த வழக்கு, மதுரையில் உள்ள முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஏ.ஆா்.வி. ரவி, குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் மொத்தம் ரூ.7.6 லட்சம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.