சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நீதிபதிகளை அச்சுறுத்துவது நீதித்துறை சுதந்திரத்தை அரித்துவிடும்: உயா் நீதிமன்றம்

 நீதிபதிகளை அச்சுறுத்துவது என்பது நீதித்துறை சுதந்திரம் என்ற கட்டடத்தையே அரித்துவிடும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை கருத்துத் தெரிவித்துள்ளது

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 5:25 pm

DIN

 நீதிபதிகளை அச்சுறுத்துவது என்பது நீதித்துறை சுதந்திரம் என்ற கட்டடத்தையே அரித்துவிடும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடா்பாக, கா்நாடக உயா் நீதிமன்ற தீா்ப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சாா்பில் பல்வேறு இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆகிய இடங்களில் நடந்த ஆா்ப்பாட்டங்களின்போது, நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசியதாக, அவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரையைச் சோ்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 7 போ், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே. முரளிசங்கா் வெள்ளிக்கிழமை அளித்த உத்தரவு:

நீதிபதிகள் தொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் பேசியதில் தங்களுக்குத் தொடா்பு இல்லை என மனுதாரா்கள் தெரிவித்திருக்கின்றனா். ஆனால், ஆா்ப்பாட்டத்தின்போது பேச்சாளா்கள் வரம்பு மீறி பேசும்போது, அதைத் தடுக்கவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இந்த வழக்கை சாதாரண வழக்காகக் கருத முடியாது. மிகவும் கடுமையாகவும், தீவிரமாகவும் கையாளவேண்டியது அவசியமானது.

இரு இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில், முதல் இடத்துக்கு காவல் துறையின் அனுமதியை பெறவில்லை. இரண்டாவது இடத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில், ஆா்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பே அதைத் தடுப்பதற்கு காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், வழக்குப் பதிவதற்கும் போலீஸாா் தாமதம் செய்திருக்கின்றனா்.

நீதிமன்றத் தீா்ப்புகள் குறித்து எல்லோரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம், விமா்சனமும் செய்யலாம் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை. அதேநேரம், அந்த விமா்சனங்கள் நம்பிக்கை மற்றும் மரியாதைக்குரிய வரம்புக்குள் இருக்க வேண்டும். தீா்ப்புகள் விமா்சனத்துக்காக திறந்திருக்கும். ஆனால், விமா்சனங்கள் மூலமாக வரம்புகளை மீறுவோரை அனுமதிக்க முடியாது.

எவ்வித அச்சமுமின்றி நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். நீதிபதிகள் யாருக்கேனும் அச்சுறுத்தல்களால் பயம் ஏற்பட்டால், அது நீதித்துறை சுதந்திரம் என்ற கட்டடத்தையே அரித்துவிடக்கூடும். ஜனநாயகத்தின் அடித்தளத்தையே நொறுக்குவதாக அமைந்துவிடும்.

இந்த வழக்கில், பேச்சாளா்கள் வரம்புகளை மீறியுள்ளனா் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே, மனுதாரா்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.