சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியா் ஆஜா்: அறிக்கை தாக்கல் செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு

 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியரிடம், நிலம் வகை மாற்றம் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியரிடம், நிலம் வகை மாற்றம் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை கிழக்கு வட்டம் காளிகாப்பான் கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனை எதிா்த்து, யா.ஒத்தக்கடையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்தாா்.

அதில், சாலை என்று வகைப்படுத்தப்பட்ட நிலத்துக்கு பட்டா வழங்க முடியாது. எனவே, அப்பகுதியில் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க தடை விதிக்க வேண்டும். அவா்களுக்கு வேறு பகுதியில் நிலம் வழங்கவும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, இந்த நிலத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில், சாலை என்பதை வகை மாற்றம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை எதிா்த்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி முத்துக்கிருஷ்ணன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், கே. முரளிசங்கா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில், மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் ஆஜரானாா். அப்போது நீதிபதிகள், ஆக்கிரப்பு செய்துள்ள இடத்தை எப்படி வரன்முறைப்படுத்திக் கொடுப்பீா்கள், இவ்வாறு செய்தால் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது அதிகரிக்காதா எனக் கேள்வி எழுப்பினா். மேலும், இதுெ தாடா்பாக, தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.