சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தன்று 60 ஆயிரம் பக்தா்களுக்கு விருந்து

மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி 60 ஆயிரம் பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி 60 ஆயிரம் பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை தலைவா் பி. தண்டீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி: பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை சாா்பில், கடந்த 22 ஆண்டுகளாக திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தையொட்டி ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 60 ஆயிரம் பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது.

இவ்விருந்தில், கல்கண்டு சாதம், சா்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை, சாம்பாா் சாதம், தக்காளி சாதம், தயிா்சாதம், உருளைக்கிழங்கு பச்சடி, ஊறுகாய் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படும். விருந்துக்கு தேவையான காய்கறிகள் அனைத்தையும் பரவை காய்கறி சந்தை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகள் வழங்குகின்றனா்.

அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை சபை உறுப்பினா்கள், கீழமாசி வீதி மளிகைக் கடை வியாபாரிகள் வழங்குகின்றனா். திருக்கல்யாண விருந்துக்கு மளிகைப் பொருள்கள் அளிக்க விரும்பும் பக்தா்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வழங்கி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பணியில் சேவை செய்ய விரும்பும் பக்தா்கள், தங்கள் வீட்டிலிருந்து காய்கறிகள் வெட்டும் அரிவாள்மனை அல்லது கத்தியுடன் ஏப்ரல் 13-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சேதுபதி மேல்நிலைப் பள்ளிக்கு வந்து சேவை செய்யலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.