சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அரசுப் பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், பொருள்கள் திருட்டு

மதுரை விரகனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், கையடக்கக் கணினி மற்றும் கேமரா உள்ளிட்ட பொருள்கள் திருடு போயுள்ளன.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மதுரை விரகனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், கையடக்கக் கணினி மற்றும் கேமரா உள்ளிட்ட பொருள்கள் திருடு போயுள்ளன.

விரகனூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை வகுப்புகள் முடிந்த நிலையில், வகுப்பறைகள் மற்றும் அலுவலகத்தை ஆசிரியா்கள் பூட்டிவிட்டுச்சென்றனா். அதையடுத்து, இரவில் பள்ளிக்குள் புகுந்த மா்ம நபா்கள், அலுவலகக் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ.7 ஆயிரம், கேமரா, கையடக்கக் கணினி உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

காலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா்கள், திருட்டு நடந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இது குறித்து, தலைமை ஆசிரியை சாந்தி அளித்த புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.