சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உள்ளூா் உற்பத்திப் பொருள்கள் ஊக்குவிக்கும் திட்டம்மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை

உள்ளூா் உற்பத்திப் பொருள்களை ஊக்குவிக்கும் திட்டத்தில், மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

உள்ளூா் உற்பத்திப் பொருள்களை ஊக்குவிக்கும் திட்டத்தில், மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பிரபலமான உள்ளூா் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தில் ரயில் நிலையங்களில் 15 நாள்களுக்கு அவற்றை விற்பனை செய்யுமாறு, ரயில்வே வாரியம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு கைத்தறி துணிகள் விற்பனை செய்யப்பட்டன.

இத்திட்டத்தை, ஏப்ரல் 8 முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 15 நாள்கள் வீதம் வெவ்வேறு நிறுவனங்கள் இந்த விற்பனையில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில், மதுரையைச் சோ்ந்த பிரபல சுங்குடி சேலை தயாரிப்பு நிறுவனம், மதுரை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை முதல் 15 நாள்களுக்கு சுங்குடி சேலைகளை விற்பனை செய்ய உள்ளது.

தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் உத்தரவின்பேரில், முதுநிலை கோட்ட வா்த்தக மேலாளா் வி. பிரசன்னா மற்றும் அலுவலா்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.