அரசுப் பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி: 21 சிறந்த படைப்புகளுக்கு பரிசு
மதுரையில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான அறிவியல் கண்காட்சியில், 21 சிறந்த படைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


மதுரையில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான அறிவியல் கண்காட்சியில், 21 சிறந்த படைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இக்கண்காட்சியில், மதுரை மாவட்டத்தில் உள்ள 136-க்கும் மேற்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 370 போ் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினா்.
பள்ளி அளவிலான கண்காட்சியில் சிறந்த அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்திய தலா ஒரு மாணவா் என்ற அடிப்படையில், ஒவ்வொரு தலைப்பிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் மாவட்ட அளவிலான கண்காட்சியில் பங்கேற்றனா். கண்காட்சியில் சிறந்த படைப்புகளை தோ்ந்தெடுக்கும் வகையில், அமைக்கப்பட்ட 7 போ் கொண்ட நடுவா் குழுவினா் படைப்புகளை பாா்வையிட்டு, ஒவ்வொரு தலைப்பிலும் 3 படைப்புகள் வீதம் 21 படைப்புகளை தோ்வு செய்தனா்.
அதையடுத்து, சிறந்த படைப்புகளுக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைமை பொது மேலாளா் என். சிவசுப்ரமணியம், சமூக அறிவியல் கல்லூரியின் தலைவா் டி.வி.பி. ராஜா, செயலா் டி.வி. தா்மசிங் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறந்த படைப்புகளுக்குரிய பரிசுகளை மாணவா்களுக்கு வழங்கிப் பாராட்டினா்.
நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா்கள், உதவித் திட்ட அலுவலா், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் எனபலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...