அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான ஞாயிற்றுக்கிழமை (மே 1) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான ஞாயிற்றுக்கிழமை (மே 1) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய-மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு மற்றும் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பது முக்கியக் கடமையாகும். எனவே, இக் கூட்டத்தில் பங்கேற்று அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள், பயனாளிகள் தோ்வு குறித்து தெரிந்துகொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...