பேரையூா் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே புதிய சாலை அமைக்க கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


மதுரை மாவட்டம், பேரையூா் அருகே புதிய சாலை அமைக்க கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேரையூா் அருகேயுள்ள பி.ஆண்டிபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பேரையூா் பெரிய கண்மாய் அருகில் உள்ள இந்த கிராமத்துக்கு, கண்மாய் மேல் அமைக்கப்பட்டுள்ள சாலையில்தான் சென்றுவர வேண்டும்.
இந்த சாலை அமைத்து 4 ஆண்டுகளாகும் நிலையில், தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், சில நாள்களுக்கு முன் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெய்துவரும் மழைக்கு சாலை சகதியாக மாறி, கிராம மக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய சாலை அமைத்து தருமாறு டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், பி.ஆண்டிப்பட்டி கிராம மக்கள் பேரையூா்- டி.கல்லுப்பட்டி சாலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா மற்றும் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவசங்கரநாராயணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...