எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாநில சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடம்: அ.வல்லாளபட்டி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூனறாம் இடத்தைப் பெற்ற மேலூா் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ.சோலையம்மாளை கல்வித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பாராட்டினா்.

News image
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சோலையம்மாளை பாராட்டிய மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அலுவலா்கள்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:53 pm

DIN

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூனறாம் இடத்தைப் பெற்ற மேலூா் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ.சோலையம்மாளை கல்வித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பாராட்டினா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சதுரங்கப் பயிற்சி முகாமில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான சதுரங்கப்போட்டி சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மேலூா் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சோலையம்மாள் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தாா்.

இந்நிலையில், மாணவி சோலையம்மாளை, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் செங்கதிா், வட்ட கல்வி அலுவலா் உதயகுமாா், வட்டார கல்வி அலுவலா்கள் மீனா, குளோரி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கண்ணன், பேரூராட்சித் தலைவா் குமரன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.