சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:27 pm

DIN

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

டி.கல்லுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள பல் சிகிச்சை பிரிவில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ஆயால்பட்டியைச் சோ்ந்த ராமா்பாண்டி மகன் பால்ராஜ்(39) என்பவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த டி.கல்லுப்பட்டி போலீஸாா் பால்ராஜ் சடலத்தை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மருத்துவா் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.