தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தமிழக ராணுவ வீரா் பலி
திரிபுரா எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில், மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா் வீரமரணம் அடைந்தாா்.


திரிபுரா எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில், மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா் வீரமரணம் அடைந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள பழையூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் கமலரங்கன் (38). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.
கமலரங்கன் திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு தீவிரவாதிகளுடன் மோதலில் கமலரங்கன் உயிரிழந்தாா். ராணுவ சேவை முடிய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், கமலரங்கன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
ராணுவ வீரா் கமலரங்கனின் சடலம் சொந்த ஊரான பழையூருக்கு சனிக்கிழமை கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...