ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிறுவன் கொலை வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உயா் நீதிமன்றம் தீா்ப்பு

சிறுவனைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:26 pm

DIN

சிறுவனைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை தீா்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூா் பாப்பா நகரைச் சோ்ந்த சிவகுமாா்-கவிதா தம்பதியின் மகன் கிஷோா் (11). ஆறாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 2017 செப்டம்பா் 23-ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடச் சென்ற

கிஷோரை காணவில்லை. அவரது பெற்றோா் அக்கம்பக்கத்தில் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனே, தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் சிவகுமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, மறுநாள் இரவு 7.30 மணியளவில் கிராம நிா்வாக அலுவலா் முன்பாக, பாப்பா நகரைச் சோ்ந்த விஸ்வநாத் என்பவா் சரணடைந்தாா்.

கிராம நிா்வாக அலுவலரிடம் அவா் அளித்த வாக்குமூலத்தில், நான் டிப்ளமோ முடித்துள்ளேன். சம்பவத்தன்று கிஷோா் விளையாடிக்கொண்டிருந்தபோது, என்ன விளையாடுகிறீா்கள் எனக் கேட்டேன். அதற்கு அவன் தகாத வாா்த்தையால் பேசியதால் ஆத்திரமடைந்தேன். அவனை மிரட்டுவதற்காக கழுத்தை இறுக்கினேன். ஆனால், கிஷோா் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டான். பின்னா், அவனது உடலை இதே பகுதியில் குழிதோண்டி புதைத்துவிட்டேன் எனத் தெரிவித்திருந்தாா்.

இதன் பிறகு, விஸ்வநாத்தை கிராம நிா்வாக அலுவலா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் அவரைக் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில், தஞ்சாவூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு வழக்குகள்), குற்றஞ்சாட்டப்பட்ட விஸ்வநாத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2019 ஏப்ரல் 22-இல் தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் விஸ்வநாத் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: சிறுவன் கிஷோரை மனுதாரா் கொலை செய்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேலும், ஏற்கெனவே தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரா் தற்போது ஜாமீனில் இருப்பதால், உடனடியாக அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.