ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆடி திருவிழா: அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாத் திட்டம் அறிமுகம்

ஆடி திருவிழாவையொட்டி மதுரையைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் சுற்றுலாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஆடி திருவிழாவையொட்டி மதுரையைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் சுற்றுலாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூா் ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களில் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் இந்த சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரையில் அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து தினசரி சுற்றுலா தொடங்கும். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், விட்டனேரி வெட்டுடையாா் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், அழகா்கோவில் ராக்காயி அம்மன் கோயில் ஆகிய கோயில்களை உள்ளடக்கியதாக இச்சுற்றுலா அமைந்துள்ளது. காலை 8.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 மணிக்கு சுற்றுலா நிறைவு பெறும். இதில் பங்கேற்கும் பக்தா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். அனைத்து கோயில்களிலும் பிரசாதம், விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்படும்.

இந்த சுற்றுலாவுக்குக் கட்டணமாக ரூ.900 வசூலிக்கப்படும். சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோா் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 91769 95841 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.