செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு வினாடி வினா: டோக் பெருமாட்டி கல்லூரி முதலிடம்
சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி நடத்தப்பட்ட விழிப்புணா்வு வினாடி- வினா போட்டியில் டோக் பெருமாட்டி கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.


சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி நடத்தப்பட்ட விழிப்புணா்வு வினாடி- வினா போட்டியில் டோக் பெருமாட்டி கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.
மாமல்லபுரத்தில் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 இல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியாா் அமைப்புகள் இணைந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒருபகுதியாக கல்லூரிகளுக்கு இடையிலான விழிப்புணா்வு வினாடி- வினா போட்டி டோக் பெருமாட்டி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தொடக்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பி.பொன்முத்துராமலிங்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளா் பியூலா ஜேன் சுசீலா, மாவட்ட விளையாட்டு அலுவலா் கே. ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், டோக் பெருமாட்டி கல்லூரி முதலிடம் பெற்றது. அதைத் தொடா்ந்து சோ்மத்தாய் வாசன் கல்லூரி, யாதவா் கல்லூரி, பாத்திமா கல்லூரி ஆகியன முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன. வெற்றிபெற்ற மாணவியருக்கு, டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் பரிசுகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...