ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இக்னௌ தோ்வுகள் இன்று தொடக்கம்

 இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பட்டப் படிப்புகளின் ஜூன் 2022 பருவத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பா் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

 இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பட்டப் படிப்புகளின் ஜூன் 2022 பருவத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பா் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வெளிநாடுகள் உள்பட மொத்தம் 831 மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது. பல்கலை.யின் மதுரை மண்டலத்தின்கீழ் கோவை, திருச்சி, பொள்ளாச்சி, உத்தமபாளையம், தேவகோட்டை, தஞ்சாவூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் கோவை, மதுரை, திருச்சி மத்திய சிறைகளிலும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (ஜ்ஜ்ஜ்.ண்ஞ்ய்ா்ன்.ஹஸ்ரீ.ண்ய்) என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். யாரேனும் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் தோ்வெழுத வந்தாலும், தோ்வு எழுதும் மாணவா்களின் பட்டியலில் பெயா் இடம் பெற்றிருந்தால் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, மாணவா்கள் தங்களுக்குரிய புகைப்பட அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருப்பது அவசியம்.

மதுரை மண்டல மையம் வெளியிட்டுள்ள செய்தியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.