ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தற்காலிக ஆசிரியா் நியமனத்திற்கு எதிரான வழக்குகளின் விசாரணையை முடிவு செய்ய தலைமை நீதிபதி அமா்வுக்குப் பரிந்துரை

தற்காலிக ஆசிரியா் நியமனத்திற்கு எதிரான வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணை குறித்து முடிவு எடுப்பதற்கு தலைமை நீதிபதிக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை செய்துள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

தற்காலிக ஆசிரியா் நியமனத்திற்கு எதிரான வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணை குறித்து முடிவு எடுப்பதற்கு தலைமை நீதிபதிக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனிடையே, தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்கு எதிராக ஷீலா பிரேமகுமாரி என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அதிகார எல்லைக்கு உள்பட்ட மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்கான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இதேபோன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்கான வழிகாட்டுதல்களில் இடஒதுக்கீடு, முன்னுரிமை தொடா்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் கூறப்படவில்லை. ஆகவே, தற்காலிக ஆசிரியா் நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து செய்தும், அந்த அறிவிப்பின் அடிப்படையில் பணி நியமன நடவடிக்கைகளைத் தொடர இடைக்காலத் தடை விதிக்கவும் உத்தரவிடக் கோரி கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த பா்வதம் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

முந்தைய விசாரணையின்போது, அரசுக்கு நிதிப் பிரச்னை இருந்தால் தற்காலிகமாக நியமனம் செய்வதற்குப் பதிலாக தொகுப்பூதியத்தில் ஆசிரியா்களை நியமிக்கலாமே என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தற்காலிக ஆசிரியா் நியமன விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியன மாறுபட்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. ஆகவே, இந்த வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணை தொடா்பாக முடிவு எடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.