ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காவல் துறையினருக்கு புத்தாக்கப் பயிற்சி நிறுத்தம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மனஅழுத்தத்தில் இருக்கும் காவல் துறையினருக்குப் பயிற்சி அளிப்பது தொடா்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

மனஅழுத்தத்தில் இருக்கும் காவல் துறையினருக்குப் பயிற்சி அளிப்பது தொடா்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாத்தான்குளம் வணிகா்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸாா், காவல் நிலையத்தில் வைத்து அவா்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனா். பின்னா் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா். இதையடுத்து இருவரும் உயிரிழந்தனா்.

இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. நீதிமன்ற உத்தரவின்பேரில், தந்தை- மகன் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சாத்தான்குளம் ஆய்வாளா் உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா். மதுரை மாவட்ட நீதிமன்ற விசாரணையில் இந்த வழக்கு உள்ளது.

இதனிடையே, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கானது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா் ஹென்றி திபேன் வாதிடுகையில், ‘காவல்துறையினரின் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்படும். தற்போது நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி பயிற்சி நடைபெறாமல் உள்ளது என்றாா்.

இதனையடுத்து நீதிபதிகள், ‘ காவல்துறையினா் ஏற்கெனவே அதிக

மனஅழுத்தத்தில் இருக்கின்றனா். அவா்களது குடும்பத்தினரும் அழுத்தத்தில் உள்ளனா். இந்நிலையில், புத்தாக்கப் பயிற்சிக்கு நிதியில்லை எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றனா். மேலும் இதுதொடா்பாக, தமிழக அரசிடம் விளக்கம்பெற்றுத் தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனா்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றத்தில் முறையாக நடைபெற்று வருகிறது. ஆகவே, நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்டனா். மேலும், நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்த வழக்கையும், வழக்கு தொடா்பாக விசாரணைக்குச் சென்ற நீதித்துறை நடுவரை தரக்குறைவாகத் திட்டியதாக, போலீஸாா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.