ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை, ஜூலை 29 ஆம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:12 pm

DIN

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை, ஜூலை 29 ஆம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா், கடந்த 2020 இல் விசாரணையின் போது காவல் துறையினா் தாக்கியதில் உயிரிழந்தனா். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட போலீஸாா் 9 போ் மீது, மதுரை மாவட்ட முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி நாகலெட்சுமி முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீதிமன்றக் காவலில் இருக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜா் செய்யப்பட்டனா். இதனையடுத்து சாட்சிகள் விசாரணையின்போது, சாத்தான்குளம் காவல் நிலைய பெண் காவலா் ரேவதியிடம் வாக்குமூலம் பெற்ற நீதிபதி சாட்சியம் அளித்தாா். இதைத் தொடா்ந்து, விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்துவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.