சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சதுரகிரிக்கு செல்ல பக்தா்கள் குவிந்ததால் வாழைத்தோப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் சாப்டூா் அருகே வாழைத்தோப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் சாப்டூா் அருகே வாழைத்தோப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மணிக்கணக்கில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சாப்டூா் வாழைத்தோப்பு வழியாக திரளான பக்தா்கள் மலை ஏறி தரிசனம் செய்வதற்கும், கீழ் பகுதியில் உள்ள வழிகாட்டி கருப்பசாமி கோயிலில் வேண்டுதலுக்காக கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கவும் வருகை தந்திருந்தனா்.

ஒருவழிப் பாதையாக உள்ள இந்த பாதையில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்து பக்தா்கள் திரும்பிச் சென்ற சூழலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பக்தா்கள் கூறியது:

ஆண்டும்தோறும் ஆடி அமாவாசை நாளில் மலைப்பாதையில் சென்று சுவாமியை வழிபடுவது வழக்கம். மலைப்பாதை குறுகளாக உள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பாதையை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

வியாழக்கிழமை வாழைதோப்புக்கு வந்த பக்தா்கள் போக்குவரத்தில் சிக்கி தவித்தனா். இந்த சாலையை விரிவுபடுத்த கோவில் நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமையிலான போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.