புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’
மதுரை மாவட்டம் பேரையூரில் புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.


மதுரை மாவட்டம் பேரையூரில் புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
பேரையூா் முக்குசாலை பகுதியில் குளிா்பானக் கடை வைத்து நடத்தி வருபவா் சம்சுதீன்(53). இவா், தனது கடையில் சட்டவிரோதமாக 353 கிலோ புகையிலை விற்பனைக்காக வைத்திருந்ததாக பேரையூா் போலீஸாா் சம்சுதீனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் உத்தரவின்பேரில், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரோஜா, பேரையூா் காவல் ஆய்வாளா் காந்தி ,டி.கல்லுப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலா் கோவிந்தன் ஆகியோா் முன்னிலையில் அந்தக் கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...