2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மதுரை: மாநகராட்சி கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல்

மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்ட தொடர் காலை 11.30மணிக்கு தொடங்கியது.

Published On :

மதுரை: மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்ட தொடர் காலை 11.30மணிக்கு தொடங்கியது. மேயர், ஆணையாளர் வருகை தராதநிலையில் இருக்கை ஒதுக்கீடு திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கான மாமன்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தங்களுக்கான இருக்கை தொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை சந்தித்து முறையிடுவதற்காக மேயர் அறைக்கு சென்றனர்.

அப்போது அதனை செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை மேயர் அறை முன்பாக இருந்த திமுகவை சேர்ந்த ரெளவுடிகள் சிலர் திடிரென செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கேமிராவை காலால் எட்டி உதைத்து உடைத்தனர்.

இதனையடுத்து திமுக ரெளவுடிகளின் அராஜக போக்கை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் அறை முன்பாக அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சி மேயர் அறையானது தொடர்பே இல்லாத ரெளவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மேலும் திமுக  பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், உறவினர்கள் முழுவதிலுமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் அனைத்துகட்சி மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களையும், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மிரட்டி தங்களது சொந்த பணிகளை செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.