புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு

மதுரையில் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு விற்பனைக்கு வந்துள்ளது.

News image

வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு.

Updated On :23 அக்டோபர் 2022, 11:36 am

DIN

மதுரையில் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு விற்பனைக்கு வந்துள்ளது.

போஸ்டர் முதல் பொறிகடலை வரை அனைத்திலும் மதுரைக்காரங்க வித்யாசம் காட்டுவதில் கெட்டிக்காரங்க. இந்தநிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசிலும் வித்யாசம் காட்டியுள்ளனர்.  தீபாவளி பண்டிகை வருவதையொட்டி ஜவுளி வியாபாரம் முதல் நகை வியாபாரம் வரை விற்பனை சூடு பிடித்துள்ளது.

அதே போல் தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசு விற்பனையும் தீவிரம் அடைந்துள்ளது. ஆண்டுதோறும் வெவ்வேறு வகையான புதிய வகை பட்டாசுகள் சந்தைக்கு வருவது வாடிக்கையானது. இந்நிலையில் மதுரையில் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு ஒன்று விற்பனைக்கு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு வரவேற்பையும் பெற்றுள்ளது.

மதுரையில் பரபரப்பாக காட்சியளிக்கும் தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்கம் மூலம் பூசப்பட்ட வெள்ளி பட்டாசு வகைகள் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.  இந்த தயாரிப்பை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.