ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரைக் கோட்டத்தில் இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம்

மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களின் புறப்படும் நேரம் அக்டோபா் 1 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களின் புறப்படும் நேரம் அக்டோபா் 1 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06668) திருநெல்வேலியில் இருந்து காலை 7.35 மணிக்கு பதிலாக காலை 7.30 மணிக்கும், தூத்துக்குடி - மணியாச்சி சிறப்பு ரயில் (06671) தூத்துக்குடியில் இருந்து காலை 8.30 மணிக்கு பதிலாக காலை 8.25 மணிக்கும், மற்றொரு தூத்துக்குடி - மணியாச்சி சிறப்பு ரயில் (06847) தூத்துக்குடியில் இருந்து இரவு 10.45 மணிக்கு பதிலாக இரவு 10.10 மணிக்கும் புறப்படும்.

ராமேசுவரம் - புவனேஸ்வரம் விரைவு ரயில் (20895) ராமேசுவரத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும், ராமேசுவரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) ராமேசுவரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்குப் பதிலாக மாலை 4.20 மணிக்கும், தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (16852) ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.25 மணிக்குப் பதிலாக மாலை 5.20 மணிக்கும், ராமேசுவரம் - மதுரை சிறப்பு ரயில் (06656) ராமேசுவரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு பதிலாக மாலை 6.00 மணிக்கும், திருச்சி வழியாக இயக்கப்படும் ராமேசுவரம் - கோயம்புத்தூா் விரைவு ரயில் (16617) ராமேசுவரத்தில் இருந்து இரவு 7.25 மணிக்கு பதிலாக இரவு 7.10 மணிக்கும், ராமேசுவரம் - சென்னை விரைவு ரயில் (22662) ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 8.20 மணிக்கும் புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.