மதுரையிலிருந்து திருப்பதி தரிசன சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் மதுரையிலிருந்து திருப்பதி தரிசன சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் மதுரையிலிருந்து திருப்பதி தரிசன சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் இருவேளை சைவ உணவு, குளிா்சாதன சொகுசுப் பேருந்து வசதி, சிறப்புக் கட்டணச் சீட்டு உள்பட பெரியவா்களுக்கு ரூ.4 ஆயிரம், சிறியவா்களுக்கு ரூ.3 ஆயிரத்து 700 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் 7 நாள்களுக்கு முன்பு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். சுற்றுலா குறித்த விவரங்களுக்கு மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் மேலாளரை 0452-2537461, 2537462 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் இணையதளத்திலும் (ஜ்ஜ்ஜ்.ற்ற்க்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீா்ம்), சுற்றுலா குறித்த விவரத்தையும், முன்பதிவையும் செய்து கொள்ளலாம்.
சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...