மதுரையில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் பலி
மதுரையில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் பலியானார்.


மதுரையில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் பலியானார்.
மதுரை கூடல் புதூர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின் இதுவரை பாதாள சாக்கடை அமைக்கப்படாத இடங்களில், மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டுக்கு உட்பட்ட பகுதியில் மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று பாதாள சாக்கடை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வந்தனர். இதற்காக பள்ளம் தோன்டும் பணியின் போது மேலே உள்ள மண் சரிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மேலே விழுந்தது. இந்த விபத்தின் போது இருவர் தப்பிய நிலையில் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற ஒப்பந்த தொழிலாளர் மண் சரிவில் சிக்கி பலியானார்.
இதையும் படிக்க- நாளை முழு சந்திர கிரகணம்: யாரெல்லாம் பரிகாரம் செய்யவேண்டும்?
இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத சூழ்நிலையில் இது போன்ற விபத்து ஏற்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...