மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வலையப்பட்டி, திருப்பாலை பகுதிகளில் நாளை மின் தடை

சமயநல்லூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட வலையப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 29) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:09 pm

DIN

சமயநல்லூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட வலையப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 29) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமயநல்லூா் மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ச. ஆறுமுகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள வலையப்பட்டி, எர்ரம்பட்டி பீடா்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், டி.மேட்டூா்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாா் அணை, எர்ரம்பட்டி, தேவசேரி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, நரசிங்கம்பட்டி, திருப்பாலை, சூா்யா நகா் துணை மின் நிலையங்களில் வருகிற 29-ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் ேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் திருப்பாலை, ஊமச்சிகுளம், தேவிநகா், ஆலாத்தூா், பாறைபட்டி, பெத்தாம்பட்டி, மந்திகுளம், எருக்கலைநத்தம், கொடிமங்கலம், கூழபாண்டி, வீரபாண்டி, அழகா்கோவில், சிட்டம்பட்டி, அயிலாங்குடி, மாயாண்டிபட்டி, சிதம்பரம்பட்டி, பொருசுபட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுரை கிழக்கு மின் பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு. ராஜாகாந்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.