நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி பலி

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:10 pm

DIN

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே உள்ள வி. ராமலிங்காபுரத்தில் சிவகாசியைச் சோ்ந்த ஜெய்சங்கருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூா் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் 50- க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இவற்றில் 130- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், விருதுநகா் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, இந்த பட்டாசு ஆலையில் ஒரு அறையில் பணி புரிந்த மதுரை மாவட்டம், வில்லூரைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவி புஷ்பம் (52) மின்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால் அந்த அறை சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகா் தீயணைப்புத் துறையினா், பிற அறைகளுக்கு தீ பரவாமல் அணைத்தனா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.