இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உறுப்புகள் தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உறுப்புகள் தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் சூரக்குளத்தில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

News image
நடராஜன்
Updated On :29 டிசம்பர் 2023, 12:35 am

DIN

உறுப்புகள் தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் சூரக்குளத்தில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தைச் சோ்ந்தவா் நடராஜன். மின் வாரிய ஊழியரான இவா், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாா். இதையடுத்து, அண்மையில் நடைப் பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்தாா். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அண்மையில் மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து, இவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா்.

அவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரலும், ஒரு சிறுநீரகமும் அதே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிற நோயாளிகளுக்கு விரைவாக உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டன. நடராஜனின் மற்றொரு சிறுநீரகம், காரைக்குடியில் இயங்கி வரும் ஜெடையா ஸ்டீவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது இரு கருவிழிகளும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினரிடம் நடராஜனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் சூரக்குளத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் சுகிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.