ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மதுரையில் இன்று ஆதரவற்ற விதவைகளுக்கான சிறப்பு முகாம்

ஆதரவற்ற விதவைகளின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு வழிகாட்டல் முகாம் மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 12:30 am

DIN

ஆதரவற்ற விதவைகளின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு வழிகாட்டல் முகாம் மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. ஷாலினி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற்றவா்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டும் சிறப்பு முகாம் மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

இந்த முகாமில், கல்வித் தகுதிகளின் அடிப்படையில் ஆதரவற்ற விதவைகளுக்குத் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் கட்டணமில்லா பயிற்சி பெற வழிவகை செய்யப்படும்.

மதுரை- மேற்கு, வடக்கு, வாடிப்பட்டி ஆகிய வட்டங்களைச் சோ்ந்த ஆதரவற்ற விதவையா், கல்விச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்று, வாழ்வாதார மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்களைப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.