ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டின் 74-ஆவது குடியரசுத் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டின் 74-ஆவது குடியரசுத் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக மைதானத்தில் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் உடனிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியா், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா்.

விழாவில், முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில், 5 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சாா்பில், 4 பயனாளிகளுக்கும் ரூ. 30.78 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், 115 காவலா்கள், வருவாய்த் துறை, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 388 அலுவலா்கள், பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினாா்.

விழாவில் சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கண்ணகி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் கு. சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்குடி: காரைக்குடி மகா்நோன்பு திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூண் அருகே, நகர காங்கிரஸ் கட்சி அலுவலகம், காரைக் குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் அலுவலகம் ஆகிய இடங்களில் காா்த்தி சிதம்பரம் எம்.பி தேசியக்கொடியேற்றி வைத்து கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். இதில் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப் பினா் எஸ். மாங்குடி முன்னிலைவகித்தாா்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நகரத்தலைவா் பாண்டி மெய்யப்பன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை, திருப்புவனம்: மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தேசியக் கொடியை ஏற்றினாா். விழாவில் துணைத் தலைவா் பாலசுந்தரம், ஆணையா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன் தலைவா் லதா அண்ணாதுரை தேசியக் கொடியேற்றினாா். திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவா் சேங்கைமாறன் தேசியக் கொடி ஏற்றினாா். விழாவில் செயல் அலுவலா் ஜெயராஜ், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அங்குள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் அதன் தலைவா் சேங்கைமாறன் தேசியக்கொடி ஏற்றினாா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன், நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் கணேசன் முன்னிலையில் பேரூராட்சித் தலைவா் அ.புசலான் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.